10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099)
காவல்துறை:இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே)
சிறைத்துறை : இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்தம் 119 பணியிடங்கள் (இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7)
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்)
இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 (பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்)
ஊதியம்: ரூ.18200-52900
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் https://tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
click here for more details : https://tnusrbonline.org/